'வருமானம் இல்லை; சினிமாவில் சம்பாதிக்கணும்: அமைச்சர் பதவிய எனக்கு பதிலாக அவருக்கு கொடுங்க'; சுரேஷ் கோபி..! - Seithipunal
Seithipunal


'வருமானம் முற்றிலுமாக நின்று விட்டது. இன்னும் நான் சம்பாதிக்க வேண்டும், ஆகையால், எனக்கு பதிலாக ராஜ்யசபா எம்பி சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக்க வேண்டும் என பிரபல மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி விருப்பம் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2024-இல் கேரள மாநிலம் திருச்சூர் பாஜ எம்பியாக சுரேஷ் கோபி தேர்வானார். தற்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சராக உள்ளார். திருச்சூரில் இருந்து மக்களவையில் அறிமுகமாகிய அவர், அதன் பின்னர், அவர் நடிப்பிலிருந்து விலகி விட்டார், இருப்பினும் அவர் தனது அரசியல் கடமைகளுடன், சினிமாவிலும் தனது வாழ்க்கையைத் தொடர விரும்புவதாக பலமுறை கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று கேரளாவின் கன்னுாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி இது குறித்து பேசியுள்ளார். அதாவது, தனக்கு மீண்டும் திரைப்பட நடிப்பைத் தொடங்க விரும்பம் உள்ளதாகவும், இன்னும் சம்பாதிக்க வேண்டும், வருமானம் முற்றிலுமாக நின்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மத்திய அமைச்சரவையில் தனக்குப் பதிலாக மற்றொரு பாஜ தலைவரும் ராஜ்யசபா எம்பியாக உள்ள சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதோடு, தன்னுடைய உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், தான் தற்போது நடிப்பைத் தவறவிட்டநிலையில், சினிமா மீதான தனது ஆர்வத்துடன் தனது அரசியல் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்த விரும்புவதாகவும், தான் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும், இன்னும் சம்பாதிக்க வேண்டும், ஏனெனில்,  அவருக்கான வருமானம் இப்போது முற்றிலுமாக நின்றுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், திரைப்படங்களை விட்டுவிட்டு ஒருபோதும் அமைச்சராக விரும்பவில்லை என்றும், 2016 அக்டோபரில் பாஜவில் இணைந்தேன், தான் ஒருபோதும் அமைச்சராக ஆசைப்படவில்லை. படங்களில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு, நான் அமைச்சராக விரும்பவில்லை என்று செய்தியாளர்களிடம் சொன்னேன். மேலும், எனது சினிமா வாழ்க்கையைத் தொடர விரும்பினேன். மக்களிடமிருந்து பெற்ற தீர்ப்பை அங்கீகரிப்பதற்காக கட்சி என்னை அமைச்சராகத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

தனக்கு பதிலாக கண்ணூரைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சி. சதானந்தன் மாஸ்டர், மத்திய அமைச்சரவையில் நியமிக்கப்பட வேண்டும் எனவும், தன்னை  நீக்கிய பிறகு சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று தான் உண்மையாகவே கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று தான் நம்புவதாக மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் சுரேஷ் கோபி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Minister Suresh Gopi says Sadanandan Master should be made a minister instead of me


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?


செய்திகள்



Seithipunal
--> -->