சிலம்பரசன் & வெற்றிமாறனின் அரசன் திரைப்படத்தின் புரோமோ வெளியீட்டு தேதி!
silambarasan arasan movie promo teaser date
சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் இணையும் அரசன் திரைப்படத்தின் புரோமோ வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த கேங்ஸ்டர் திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சில மாதங்களுக்கு முன் புரோமோ படப்பிடிப்பு முடிந்திருந்தாலும், இதுவரை அறிமுக வீடியோ மட்டுமே வெளியிடப்பட்டது.
முதலில் புரோமோவை அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிட தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அது தாமதமானது.
இந்நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். அதன்படி, அரசன் திரைப்படத்தின் புரோமோ அக்டோபர் 16 ஆம் தேதி மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10.07 மணிக்கு யூடியூபில் வெளியிடப்பட உள்ளது.
தற்போது, புரோமோ வெளியீட்டு அறிவிப்பால் அரசன் படத்துக்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
English Summary
silambarasan arasan movie promo teaser date