போலியோ  இல்லாத தமிழ்நாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்! - Seithipunal
Seithipunal


21 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 6 மாவட்டங்களில் நடைபெற்ற போலியோ’ சொட்டு மருந்து சிறப்பு முகாமை   அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-2012-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு ‘போலியோ வைரஸ் பரவல் கொண்ட தொற்றுநோய் நாடுகள்’ பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி, 2014-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி அன்று ‘போலியோ’ பாதிப்பில் இருந்து விடுபட்ட நாடாக இந்தியாவுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

‘போலியோ’ தடுப்பூசி முயற்சிகள் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறுவதால், தமிழ்நாடு கடந்த 21 ஆண்டுகளாக ‘போலியோ’ இல்லாத மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் இறுதியாக கடந்த 2004-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் போலியோ நோய் கண்டறியப்பட்டது.

இந்திய அளவில் மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் கடந்த 2011-ம் ஆண்டு ‘போலியோ’ வைரஸ் இறுதியாக கண்டறியப்பட்டது. ஆக 11 ஆண்டுகள் இந்தியா முழுமைக்கும் போலியோ இல்லாத நாடாக இருந்து வருகிறது. 21 ஆண்டுகள் தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து சிறப்பு போலியோ சொட்டு மருந்து தினம் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது 6 மாவட்டங்களில் 7 ஆயிரத்து 91 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இம்மையங்களில் 7.88 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Polio-free Tamil Nadu Minister Ma Subramanian expresses pride


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->