வ. சுப்பய்யா அவர்களின் நினைவுநாள்..கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!
Commemoration day of V Subbayya Party members paid tribute by garlanding
மக்கள் தலைவர் வ. சுப்பய்யா அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தின் முதன்மை தலைவர்களில் ஒருவர், தென்னிந்தியாவில் முதன்முறையாக கம்யூனிஸ்ட் கட்சி கிளையை அமைத்தவர்.தொழிலாளி உரிமைகளுக்காக, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை, பெண் ஊழியர்களுக்கான நலன் ஆகியவற்றுக்காக போராடினவர்.புதுச்சேரியின் அரசியல் வரலாறிலும் இந்திய விடுதலை வரலாறிலும் நிகரற்ற வீரர் என போற்றப்படுகிறார் மரியாதைக்குரிய திரு. வ. சுப்பையா அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, இன்று 12.10.2025 காலை நெல்லிதோப்பு சிக்னலில் அமைந்துள்ள அவரின் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவரும் மாநில கழக அமைப்பாளருமான அண்ணன் திருமிகு. இரா. சிவா, எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் திமுகவினர் மரியாதை செலுத்தப்பட்டது.
அவருடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், தொகுதி செயலாளர்கள் நடராஜன், சக்திவேல், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் அன்பழகன், தொண்டரணி துணை அமைப்பாளர் கருணாகரன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் அஜிபாஷா, தகவல் தொழில் நுட்ப அணி அருண் சுப்பிரமணியன், தொகுதி துணை செயலாளர் கண்ணதாசன், கிளைச்செயலாளர்கள் இளையநம்பி, ஆதி, ரமேஷ், சின்ராசு, அண்ணா நகர் அன்பு, சொல்தா ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
English Summary
Commemoration day of V Subbayya Party members paid tribute by garlanding