கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியா வந்தடைந்தார்..!
Canadian Foreign Minister Anita Anand arrives in India
கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று இந்தியா வந்தார். அரசுமுறைப் பயணமாக இந்தியா டெல்லியில் வந்திறங்கிய அவரை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேரில் சென்று வரவேற்றார்.
அனிதா ஆனந்த், நாளை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது, இரு நாடுகளின் வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், இருநாடுகளுக்கு இடையிலான முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் விதமாக, மும்பையில் கனடா மற்றும் இந்திய நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து அனிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கனடா அமைச்சர் அனிதா ஆனந்தின் சுற்றுப்பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
'இந்த பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும். இந்தியா-கனடா உறவுகளில் ஏற்பட்டுள்ள நேர்மறையான வளர்ச்சி மேலும் முன்னெடுக்கப்படும்,' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தின் இந்தியப் பயணத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் மற்றும் சீனாவுக்குச் செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Canadian Foreign Minister Anita Anand arrives in India