ஆன்லைன் கேம் அடிமைத்தனம்: காசியாபாத்தில் 3 சகோதரிகள் உயிரிழப்பு…! பெற்றோரின் கண்ணீர் கேள்வி... - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரை உலுக்கிய சோகச் சம்பவம் ஒன்று குடும்பங்களையும், பெற்றோர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. ‘கொரியன் லவ் கேம்’ எனப்படும் ஆன்லைன் விளையாட்டில் தீவிரமாக மூழ்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், மனஅழுத்தத்தின் உச்சத்தில் கடந்த வாரம் உயிரிழந்தனர்.

இந்த துயரச் சம்பவம் குறித்து உருக்கமாக பேசிய அவர்களின் தந்தை, “என் மகள்கள் கொரிய நாடகங்கள், ஆன்லைன் கேம்கள், ரீல்ஸ் என்று மொபைல் உலகிலேயே முழுகிக் கிடந்தார்கள்.

அவர்களின் எதிர்காலத்தை நினைத்து சில நாட்களுக்கு செல்போன்களைப் பிடுங்கி வைத்தேன்.

அது தவறா? குழந்தைகளின் நலனுக்காக எடுத்த முடிவு இப்படிப் பெரும் துயரமாக மாறுமென்று கனவிலும் நினைக்கவில்லை,” என்று கண்ணீருடன் தெரிவித்தார் .டிஜிட்டல் அடிமைத்தனம், பெற்றோர்-குழந்தைகள் இடையேயான உரையாடல் குறைவு, மனநலம் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை இன்றைய சமூகத்தில் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
(குறிப்பு: மனஅழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் இருந்தால் உடனடியாக நம்பகமானவர்களுடன் பேசவும் அல்லது அருகிலுள்ள உதவி எண்களை தொடர்புகொள்ளவும்.)
சென்னையைச் சேர்ந்த சினேகா தற்கொலை தடுப்பு மையம் (Sneha Suicide Prevention Centre), மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு 24/7 இலவச உணர்ச்சிப்பூர்வ ஆதரவை வழங்குகிறது. 044-24640050, 044-24640060 ஆகிய எண்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Online game addiction 3 sisters die Ghaziabad parents tearful question


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->