தினமும் புதிய ரெக்கார்ட்: தங்க-வெள்ளி விலையில் கட்டுப்பாடில்லா ஏற்றம்...! இன்றைய விலை நிலவரம்...?
New record every day Uncontrolled surge gold and silver prices What today prices
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்றம் கண்டுகொண்டே புதிய சாதனைகளை பதிவு செய்து வருகிறது. காலை உயர்வு, மாலை மேலும் உயர்வு என இருவேளை விலை மாற்றம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வார இறுதியில் ஒரு கிராம் தங்கம் ரூ.14,420-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,360-க்கும் விற்பனையான நிலையில், அது ஏற்கனவே உச்சத்தைத் தொட்டதாக கருதப்பட்டது.

ஆனால் வாரத்தின் முதல் நாளிலேயே சந்தை மீண்டும் சூடு பிடித்துள்ளது. இன்று மட்டும் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.1,840 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையாகிறது. இதனால் நகைக்கடைகளில் வாங்குபவர்கள் கவலையுடன் விலை நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
தங்கத்தின் ஏற்றத்தைப் போலவே வெள்ளியும் பின்னடையவில்லை. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300-ஐ எட்டியுள்ளது. பார் வெள்ளி ரூ.3 லட்சம் என்ற உயர்ந்த விலையில் விற்பனையாகி, முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த 5 நாட்களின் தங்க விலை (22 காரட் – ஒரு பவுன்):
08-02-2026 – ரூ.1,15,360
07-02-2026 – ரூ.1,15,360
06-02-2026 – ரூ.1,14,000
05-02-2026 – ரூ.1,14,560
04-02-2026 – ரூ.1,19,200
கடந்த 5 நாட்களின் வெள்ளி விலை (ஒரு கிராம்):
08-02-2026 – ரூ.285
07-02-2026 – ரூ.285
06-02-2026 – ரூ.280
05-02-2026 – ரூ.300
04-02-2026 – ரூ.320
தொடர்ச்சியான இந்த விலை ஏற்றம், நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரே நேரத்தில் சவாலாகவும் சுவாரஸ்யமாகவும் மாறியுள்ளது. “தங்கம் வாங்க வேண்டுமா… காத்திருக்க வேண்டுமா?” என்ற குழப்பத்தில் மக்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
English Summary
New record every day Uncontrolled surge gold and silver prices What today prices