வெள்ளை மாளிகையில் இருந்து கடும் கட்டுப்பாடு: தேர்தல் சீர்திருத்தப் போருக்கு டிரம்ப் அழைப்பு...! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் பதவியேற்ற முதல்நாளிலிருந்தே டொனால்டு டிரம்ப் அதிரடி முடிவுகள் மூலம் அரசியல் மேடையை குலுக்கி வருகிறார். உலக நாடுகளுக்கு வர்த்தக வரிகள் விதித்து பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுத்த அவர், தற்போது தனது கவனத்தை அமெரிக்க தேர்தல் முறைமைக்கு திருப்பியுள்ளார்.

“தேர்தல் முறையில் பெரிய சீர்திருத்தம் அவசியம்” என்று வலியுறுத்திய டிரம்ப், முந்தைய தேர்தல்களில் வாக்கு மோசடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டினார். “வாக்குகள் திருடப்பட்டன, ஜனநாயகத்தின் நம்பிக்கை குலைந்தது. இதை இனி அனுமதிக்க முடியாது.

கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வந்து தேர்தல் முறையை சுத்தப்படுத்துவோம்,” என்று அவர் தெரிவித்தார்.இதற்காக பல புதிய விதிமுறைகளையும் முன்வைத்துள்ளார்.

குறிப்பிட்ட சில சூழ்நிலைகளைத் தவிர, வாக்களிக்கும் அனைவரும் அமெரிக்க குடியுரிமைக்கான உறுதியான ஆதாரத்தை காட்ட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும்.

மேலும், அஞ்சல் மூலம் வாக்களிக்கும் நடைமுறை பெரும்பாலும் ரத்து செய்யப்படுவதுடன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு மட்டுமே அதில் விதிவிலக்கு வழங்கப்படும் என கூறினார்.

இந்த தேர்தல் சீர்திருத்தங்களை அமல்படுத்த குடியரசுக் கட்சியினர் முழு ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்றும் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு அமெரிக்க அரசியலில் புதிய விவாதத்தையும், கடும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tight control from White House Trump calls battle over election reform


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->