108 ஆம்புலன்ஸ் சேவை காத்திருப்பு நேரம் 07.57 நிமிடமாக குறைப்பு; தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு..!
108 ambulance service waiting time reduced in Tamil Nadu
இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன நிலையில், சுமார் 06 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்ருக்கின்றனர். அவசர மருத்துவ உதவிக்காக தினமும் கட்டுப்பாட்டு அறைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
இந்த சூழலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் மேம்பால கட்டுமான பணிகள் இதர சாலை பணிகள் நடந்து வருகின்றது. இதன் காரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிக்கப்பட்ட செல்லவேண்டிய இடங்களுக்கு விரைந்து செல்வதற்கு காலதாமதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதற்கான காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதிக விபத்துகள் நடக்கும் இடங்கள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட இடங்கள், குடிசைப் பகுதிகள் போன்றவை ஹாட் ஸ்பாட்டுகளாக கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கையாக 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முக்கிய பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் கட்டளை மையத்திற்கு அழைப்புகள் வரும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தை அணுகிட வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்தை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் 05 நிமிடங்களிலும், செங்கல்பட்டு, கடலூரில் 07 நிமிடங்களிலும், பிற மாவட்டங்களில் 08 நிமிடங்களிலும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பெற முடியும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
108 ambulance service waiting time reduced in Tamil Nadu