மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து: நடிகர் ஸ்ரீ காந்த் மீது காங்கிரஸ் புகார்; அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்..!
Congress files complaint against actor Srikanth Iyengar for making derogatory remarks about Mahatma Gandhi
தேச தந்தை மகாத்மா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாக தெலுங்கு நடிகர் ஸ்ரீ காந்த் ஐயங்கார் மீது காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்த். இவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில் மகாத்மா காந்தியை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது. அதில், காந்தியைப் பற்றித் மிக தரக்குறைவான கருத்துக்களைக் கூறியதுடன், நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்தும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர் (எம்.எல்.சி) பால்மூர் வெங்கட், நடிகர் ஸ்ரீகாந்த் ஐயங்கார் மீது ஐதராபாத் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

குறித்த புகாரில், நடிகர் ஸ்ரீகாந்த் ஐயங்கார், மகாத்மா காந்தியை ‘ஒட்டுண்ணி’ போன்ற கொடூரமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் ஐயங்காரின் இந்த அவதூறு பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், தெலுங்குத் திரையுலகம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் எம்.எல்.சி. பால்மூர் வெங்கட் வலியுறுத்தியுள்ளார். குறித்த புகார் அடிப்படையில், விசாரணை தொடங்க நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் ஸ்ரீ காந்த் ஐயங்கார் இதுவரை பொதுவெளியில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Congress files complaint against actor Srikanth Iyengar for making derogatory remarks about Mahatma Gandhi