மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 23 பேர் பலி; கேரளா அமைச்சர் அறிவிப்பு..!
23 people die in Kerala due to brain eating amoeba infection
கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அமீபா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்த மூளைக்காய்ச்சலால் 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி 23 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
இன்றுடன் சேர்த்து மொத்தம் 104 அமீபிக் தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு எதிராக அரசு தீவிரமாக போராடி வருகிறது.

கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. கோழிக்கோடு, மலப்புரத்திலும் தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதை அடுத்து, மூளைக்காய்ச்சல் தொடர்பான நோய் தொற்றுகளை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.
அதன் பயனாக, மூளைக்காய்ச்சல் பற்றிய தொற்றுகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக பெறப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் 104 பேருக்கு இந்த தொற்று உள்ளது. அவர்களில் 23பேர் பலியாகி இருக்கின்றனர்.' என்று கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
23 people die in Kerala due to brain eating amoeba infection