அனைத்து இஸ்ரேல் பணய கைதிகளும் விடுதலை: இந்தியா மனமார்ந்த வரவேற்புடன் பாராட்டுகிறது - பிரதமர் மோடி!
Israel gaza PM Modi USA trump
இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான ஆயுத மோதல் பல மாதங்களாக தொடர்ந்த நிலையில், இறுதியாக இரு தரப்பும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஹமாஸ் அமைப்பு இன்று உயிருடன் இருந்த 20 பிணைக்கைதிகளை விடுவித்துள்ளது.
இந்த நடவடிக்கை உலகளாவிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: “இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பணய கைதிகளும் விடுவிக்கப்பட்டதை இந்தியா மனமார்ந்த வரவேற்புடன் பாராட்டுகிறது. இந்த விடுதலை, அந்த கைதிகளின் குடும்பங்கள் காட்டிய தைரியத்திற்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட உறுதியான அமைதி முயற்சிகளுக்கும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உறுதியான தலைமையிற்குமான சின்னமாகும்.”
மேலும் அவர் தொடர்ந்ததாக, “பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலை பெறும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் உண்மையான முயற்சிகளை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது. இவ்விடுதலை பிராந்தியத்தில் அமைதி மற்றும் மனிதாபிமானத்தின் புதிய அத்தியாயமாக அமையட்டும்,” என கூறியுள்ளார்.
English Summary
Israel gaza PM Modi USA trump