நடுவானில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பயணி செய்த அதிர்ச்சி செயல்.!
passenger harassment to employee in flight
நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடிக்கு நேற்று முன்தினம் இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் ஒரு பயணி மதுபோதையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த பயணி விமானத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் வழியில் அங்கிருந்த விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பணிப்பெண், பயணி பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து விமான ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, விமானம் சீரடியில் தரையிறங்கிய உடன் அந்தப் பணிப்பெண் பாலியல் தொல்லை சம்பவம் குறித்து பாதுகாப்புப்படை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். அந்த நபர் ரஹதா நகர போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
passenger harassment to employee in flight