பிரபாஸின் பிறந்தநாளில் டபுள் ட்ரீட்!- இரண்டு பெரிய அப்டேட்களுடன் ரசிகர்கள் உற்சாகம்...!
Double treat on Prabhas birthday Fans excited with two big updates
பன்இந்தியன் ஸ்டார் பிரபாஸ் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இதையொட்டி, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே கொண்டாட்ட வேளையில் மிதந்துகொண்டிருக்கின்றனர்.இதற்கிடையில், ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘தி ராஜா சாப்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் அவரது பிறந்தநாளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதோடு, ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு அறிவிப்பும் அதே நாளில் வெளியாகவுள்ளது.சினிமா வட்டாரங்களில் இந்தப் படத்துக்கு “பவுஜி” என்ற பெயர் பரவலாக பேசப்பட்டாலும், இயக்குநர் ஹனு இதுவரை அதனை உறுதிப்படுத்தவில்லை.இப்படத்தில் இமான்வி (Iman V) கதாநாயகியாக நடிக்கிறார். பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் இந்த இரட்டை அப்டேட், ரசிகர்களுக்கு ஒரு “மாஸ் பந்தா பண்டிகை” போல அமையவுள்ளது.
English Summary
Double treat on Prabhas birthday Fans excited with two big updates