மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் தீவிரம் ; '2028க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்'; ராஜன் செல்லப்பா அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


மதுரையில் கட்டப்பட்டு வரும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வும், மதுரை மாவட்ட அதிமுக மூத்த தலைவருமான வி.வி.ராஜன் செல்லப்பா இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். 

அதனை தொடர்ந்து அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளிகையில் கூறியுள்ளதவத்துள்ளதாவது;

மருத்துவமனை கட்டிட பணிகளில் ஏறக்குறைய 2500 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றதாகவும், கட்டிட பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார் 

வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறதோடு, முதற்கட்ட பணிகள் மார்ச் இறுதியில் முடிவடையும் என்றும், விடுதி மற்றும் டைனிங் ஹால் முதல்கட்டமாக ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், விமர்சிப்பவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெறுகிறதாக கூறியுள்ளதோடு, மதுரைக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இந்த எய்ம்ஸ் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 2028க்குள் கட்டிட பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வாய்ப்பு உள்ளதாக கூறிய அவர், நிதிக்கு முதலில் தாமதம் ஆனது. விரைவில், முழுமையாகத் தயாராக உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமரும், அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து திறந்துவைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி, மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட, பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், கட்டுமானப் பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

எதிர்வரும், பிப்ரவரி 28, அன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தரவுள்ளார். அப்போது, எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளைத் திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், முதற்கட்ட பணிகள் மார்ச் இறுதியில் முடிவடையும் என ராஜன் செல்லப்பா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajan Chellappa announced that the Madurai AIIMS hospital will be open to the public by 2028


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->