பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது தற்கொலை படை தாக்குதல்: ராணுவ வீரர் 07 பேர் பலி, 13 பேர் படுகாயம்..!
7 soldiers killed in suicide attack on Pakistani army camp
பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் ஒன்றின் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்ட்டுள்ளது. இதன் போது ராணுவ வீரர்கள் 07 பேர் உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அத்துடன், கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது இரு நாடுகளும் 48 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ள நிலையில் இந்த சம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
அதே நேரத்தில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என கத்தார் அழைப்பு விடுத்துள்ளது. இதேவேளை, நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆயுதமும், பணமும் கொடுத்து ஆதரிக்கும் பாகிஸ்தான், அதன் மோசமான பின்விளைவுகளை இப்பொழுது எதிர்கொள்வதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
7 soldiers killed in suicide attack on Pakistani army camp