இடைக்கால அரசின் புதிய அரசியல் சாசனத்திற்கு எதிர்ப்பு; வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது..!
Violence has broken out again in Bangladesh in protest against the new constitution
வங்கதேசத்தில்புதிய அரசியல் சாசனத்தை எதிர்த்து மீண்டும் போராட்டம் வெடித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் விரட்டியடித்துள்ள சம்பவம் நடந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடைபெறுகிறது. இந்த இடைக்கால அரசு இன்று (அக்டாபர் 17) புதிய அரசியல் சாசனத்தை வெளியிட்டது.
இந்த சாசனத்தை எதிர்த்து மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தியதில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அந்நாட்டின் பாராளுமன்ற வளாகம் முன்பு கூடி போராட்டத்தில் குதித்தனர். அப்போது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைய மறுக்கவே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, போராட்டகாரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால், ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசாரின் வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு, போலீசார் தங்கியிருந்த கூடாரங்களையும் சேதப்பபடுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளையும் போலீசார் வீசியுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் கூடுதல் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Violence has broken out again in Bangladesh in protest against the new constitution