திரையில் கவர்ச்சி, திரை வெளியே வலி...! -அரிய நோயுடன் போராடும் பூமி பட்னேக...! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டின் அழகும், திறமையும் கலந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் பூமி பட்னேகர். தனது கவர்ச்சியான நடிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். தற்போது திரைப்படங்களுடன் சேர்ந்து வெப் தொடர்களிலும் பிரபலமாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு அரிய வகை தோல் நோயால் தன்னை பல ஆண்டுகளாக வாட வைக்கும் நிலை குறித்து அவர் திறந்த மனதுடன் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்போது பூமி தெரிவித்ததாவது,"எனக்கு ‘எக்ஸிமா’ என்ற அரிய தோல் நோய் உள்ளது. இது எனக்கு சிறுவயது முதலே இருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் முழுமையாக கண்டறியப்பட்டது. அதிகமான மன அழுத்தம் அல்லது அடிக்கடி பயணம் செய்யும் போது தோலில் தடிப்புகள், அரிப்பு போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.

அந்த வலி சில நேரங்களில் தாங்க முடியாததாக மாறுகிறது. தற்போது இதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன்" என்றார்.மேலும், தனது உடல்நிலை குறித்து இவ்வாறு திறந்த மனதுடன் பகிர்ந்த பூமியின் நேர்மையான பேட்டி, ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Charm on screen pain off screen Bhumi Patnekha struggles rare disease


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->