திரைப்பட நெருக்கக் காட்சிகள் குறித்து திறந்தவெளி பேசிய சுவாரா பாஸ்கர்!-நெட்டிசன்ஸ் விவாதத்தில்!
Swara Bhaskar speaks openly about intimate scenes movies Netizens in discussion
பாலிவுட் நடிகை சுவாரா பாஸ்கர், திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.தனுஷுடன் இணைந்து நடித்த ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான சுவாரா, சமீபத்தில் அளித்த பேட்டியில், நெருக்கமான காட்சிகளைப் பற்றி தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது,"இப்போது திரைப்படங்களில் கதாநாயகி நெருக்கமான காட்சிகளில் நடிப்பது மிகச் சாதாரண விஷயமாகிவிட்டது. ஒரு காலத்தில் இத்தகைய காட்சிகள் வந்தால் அதைப் பற்றி பெரிதாக பேசுவார்கள். ஆனால் இப்போது அது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சில நேரங்களில் தேவையில்லாத போதும் இப்படியான காட்சிகளை சேர்த்துவிடுகிறார்கள். நானும் சில படங்களில் இத்தகைய காட்சிகளில் நடித்திருக்கிறேன்.
ஆனால் அதை ஒரு கதையின் பகுதியாகவே பார்க்க வேண்டும்.திரையில் இத்தகைய காட்சிகளைப் பார்த்தாலே அதை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
அது வாழ்க்கையின் ஒரு இயல்பான பகுதி என்று புரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் சினிமாவை நாமும் ஆரோக்கியமான மனப்பாங்குடன் ரசிக்க முடியும்” என்று சுவாரா தெரிவித்துள்ளார்.
English Summary
Swara Bhaskar speaks openly about intimate scenes movies Netizens in discussion