கர்நாடகாவில் சாதிவாரி சர்வே: 'ராஜ்யசபா எம்பி சுதாமூர்த்தியின் முடிவு தவறானது'; சித்தராமையா..!
Siddaramaiah says Rajya Sabha MP Sudhamurthy decision on caste wise survey in Karnataka is wrong
கர்நாடகாவில் ஜாதிவாரி சர்வேயை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடத்துகிறது. இதில் பங்கேற்க விரும்பாதோருக்கு விலக்கு அளிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி, அவரது மனைவியும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுதா மூர்த்தி ஜாதிவாரி சர்வேயில் பங்கேற்க விருப்பமில்லைஎன பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜாதிவாரி சர்வேயில் பங்கேற்கவில்லை என்றும், நாங்கள் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் கிடையாது. எனவே, இந்த சர்வேயால் எந்த பயனும் இல்லை. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சர்வேயில் பங்கேற்கப்போவதில்லை என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளதாவது: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே சர்வே நடத்தப்படுகிறது என நினைப்பது தவறு என்றும், வரும் நாட்களில் மத்திய அரசும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்களா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், தங்களிடம் உள்ள தவறான புரிதல் காரணமாக அவர்கள் இத்தகைய கீழ்படியாமையை காட்டக்கூடும் என்றும், கர்நாடகாவில் 07 கோடி பேர் உள்ளனர். அந்த மக்களின் பொருளாதாரம், கல்வி குறித்து அறிய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒட்டுமொத்த மக்களுக்காகவே இந்த சர்வே நடத்தப்படுகிறது என்றும், சக்தி யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் உயர்ஜாதிகள் இணைக்கப்படுவார்கள். இது குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறதாகவும், அரசு இது குறித்து விளக்கமளித்துள்ளது. 07 கோடி பேருக்குமான சர்வே இது என்றும் சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
English Summary
Siddaramaiah says Rajya Sabha MP Sudhamurthy decision on caste wise survey in Karnataka is wrong