மட்டன் குழம்பில் தேரை - பூந்தமல்லியில் பிரபல ஹோட்டலுக்கு சீல்.!! - Seithipunal
Seithipunal


ஓட்டலில் மட்டன் குழம்பில் இறந்த தேரை கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே நாவலடி என்கிற பிரபல தனியார் ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது அதில் முழு தேறை இறந்த நிலையில் கிடந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ஓட்டல் நிர்வாகத்திடம் உணவில் தேரை இறந்து கிடந்தது குறித்து கேட்டனர். இதனால், வாடிக்கையாளருக்கும், ஓட்டல் நிர்வாகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வாடிக்கையாளர் சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். அதன் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டலுக்கு வந்து சோதனை நடத்தி ஓட்டலுக்கு சீல் வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

food safety department seal to popular hotem in poonthamalli for death therai found in kuzhambu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->