பஹல்காம் தாக்குதல்: காஷ்மீர் மக்கள் குறித்து பரூக் அப்துல்லா சர்ச்சை கருத்து; மெஹபூபா முப்தி கண்டனம்..!
Farooq Abdullah controversial comments on the people of Kashmir Mehbooba Mufti condemns
காஷ்மீர் மக்கள் குறித்து பரூக் அப்துல்லா சர்ச்சையாக கருத்து கூறியதாக கூறி அவருக்கு எதிராக மெஹபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி. இவர் பரூக் அப்துல்லா பற்றி கூறியதாவது, ‘பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில், உள்ளூர் காஷ்மீரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளதை கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவரது கருத்து பிளவை ஏற்படுத்தும் வகையிலும், ஆபத்தானதாகவும் உள்ளது எனவும், ஒரு மூத்த அரசியல் கட்சித் தலைவராகவும், காஷ்மீரியாகவும் இருக்கும் அவர், இவ்வாறு கூறுவது ஒட்டுமொத்த காஷ்மீரிகள் மற்றும் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என மெஹபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாருக் அப்துல்லா அவ்வாறு பேசியது பிரிவினைவாத கருத்துக்களை தூண்டும்படி உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டு மக்களை காஷ்மீரிகளுக்கு எதிரான தாக்குதல்களை தூண்டிவிடுகிறது எனவும், தீவிரவாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான அடையாளத்தை ஒன்றிய அரசு வேறுபாடுத்தி பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தீவிரவாதத்தை எதிர்க்கும் காஷ்மீரிகளை அந்நியப்படுத்தக் கூடாது என்றும், பஹல்காம் வழக்கில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும், பலர் துன்புறுத்தப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன’ என்று மெஹபூபா முப்தி கவலை தெரிவித்துள்ளார்.
English Summary
Farooq Abdullah controversial comments on the people of Kashmir Mehbooba Mufti condemns