வைகை ஆற்றில் மிதந்து வந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!!
ungaludan stalin sheme petions float vaigai river
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மதம் 15 ஆம் தேதி 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த முகாமில் தரப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் படி மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஆவணங்களில் பெயர் திருத்தம், பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றுக்கான மனுக்களை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்கள் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து ஆற்று நீரில் மிதந்த மனுக்களை சேகரித்து மனுக்களை ஆற்றில் வீசியவர்கள் யார்? என்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றில் வீசப்பட்ட மனுக்கள் சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் பகுதிகளில் நடந்த முகாம்களில் பெற்றப்பட்டுள்ளன. இந்த மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ungaludan stalin sheme petions float vaigai river