மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசில்டாவை ஏமாற்றி விட்டாரா...?
Did Madhampatti Rangaraj cheat on Joy Crisilda
பிரபல சமையல்துறை நிபுணரும்,நடிகருமான 'மாதம்பட்டி ரங்கராஜ்' பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவையை செய்வது உயர்ந்தவர்.அதுமட்டுமின்றி, தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் இருக்கிறார். இவர் ''ஸ்ருதி'' என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதிக்கு தற்போது இரு குழந்தைகள் இருக்கின்றனர்.இதற்கிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் பேஷன் டிசைனரான ஜாய் கிரிசில்டாவை 2 -வது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளிவந்தது.இதையடுத்து திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது மக்களிடையே பேசுபொருளானது.
இதற்கு பதிலாக 'ஜாய் கிரிசில்டா' தனது இன்ஸ்டாகிராமில், குழந்தையின் பெயரை 'ராஹா ரங்கராஜ்' என அறிவித்தார்.இதற்கு பல விதமான விமர்சனங்கள் இணையத்தில் பரவி வந்தது.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா தற்போது புகார் தெரிவித்துள்ளார்.சென்னையில் கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ், 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ஏமாற்றி விட்டதாக 'ஜாய் கிரிசில்டா' காவலில் புகார் அளித்துள்ளார்.இது தற்போது பூகம்பமாக கிளம்ப உள்ளது.
English Summary
Did Madhampatti Rangaraj cheat on Joy Crisilda