HERO-வாக அறிமுகமாகும் 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்...!
Tourist Family director Abhishan Jeevind to make his debut HERO
அண்மையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.இதனிடையே,அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

இப்படத்தை எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் இவர் 'சத்யா' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதுமட்டுமின்றி,மலையாள நடிகை 'அனஸ்வரா ராஜன்' அவருக்கு ஜோடியாக 'மோனிஷா' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் இசைக்காக ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
மேலும் குறிப்பிடத்தக்க விஷயமாக இப்படத்தை 'டூரிஸ்ட் பேமிலி' படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மதன் இயக்குகிறார்.
இதனிடையே இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது.இந்த பூஜையில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், சசிகுமார், ஷான் ரோல்டன்,சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
English Summary
Tourist Family director Abhishan Jeevind to make his debut HERO