இறப்பதற்கு முன்பே சுடுகாட்டில் இடத்தை முன்பதிவு செய்யும் மக்கள் - எந்த மாநிலத்தில் தெரியுமா?
peoples place booking before death in andira
ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா நகர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் மக்கள் இறப்பதற்கு முன்பாகவே தங்களுக்கான இடத்தை முன்பதிவு செய்து வருகின்றனர்.
தாங்கள் இறந்த பிறகு தங்களது உடல்களை உறவினர்கள் எவ்வாறு அடக்கம் செய்வார்கள் என தெரியாது என்பதால் மனைவி இறந்த பிறகு கணவரும், கணவர் இறந்த பிறகு மனைவியும் அவர்களது உடலை அடக்கம் செய்ய அருகருகே கல்லறை கட்ட இடத்தை முன்பதிவு செய்யும் பழக்கம் இருந்து வருகிறது.
ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கல்லறை அருகே முன்பதிவு செய்யப்பட்ட பகுதி என்று பலகை வைத்துள்ளனர்.கணவன், மனைவி சிறு சிறு சண்டைகளுக்காகவே பிரிந்து செல்லும் கால நிலையில் இறந்த பிறகும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்லறை கட்ட இடங்களை முன்பதிவு செய்து வருவதாக தெரிவித்தனர்.
English Summary
peoples place booking before death in andira