இங்கிலாந்து பயணத்தின் நோக்கம் குறித்து நாளை தெரிவிப்பேன்...!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
I inform you about purpose England trip tomorrow Chief Minister MK Stalin
சென்னை மாநகரம் நீலாங்கரையில் தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ அவர்களின் இல்லத் திருமண விழா நடைபெற்றது.அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.
இந்தத் திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"என்.ஆர்.இளங்கோ கலைஞர் மீதும், தி.மு.க. மீதும், என் மீதும் பற்று கொண்டவர்.

தேர்தல் காலத்தில் வழக்கறிஞர் அணியை தயார் நிலையில் வைத்திருப்பார் என்.வாக்குத்திருட்டு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பீகார் போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.நாளைய தினம் ஜெர்மனி, இங்கிலாந்து ஒரு வார கால பயணம் செல்கிறேன்.
இதுவரை நான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் நோக்கம் குறித்து நாளை தெரிவிக்கிறேன்.ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது" என்று தெரிவித்ததார்.
English Summary
I inform you about purpose England trip tomorrow Chief Minister MK Stalin