இரண்டு படத்தில் ஏதாவது ஒன்று தான்... ஆனால் இது நம்ம தீபாவளி...! - பிரதீப் ரங்கநாதன் - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய 'கீர்த்தீஸ்வரன்'. இவர் தற்போது இயக்கி வரும்  'ட்யூட்' படத்தில் இயக்குனரும் நடிகருமான 'பிரதீப் ரங்கநாதன்' நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக 'பிரேமலு' புகழ் 'மமிதா பைஜூ' நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் இசை பணிக்கு சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும், படத்தின் FIRST LOOK போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'ஊரும் பிளட்' வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் Lik திரைப்படமும் திரைக்கு வரும் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில்,அண்மையில் நடந்த ஒரு விழாவில் பிரதீப் ரங்கநாதன் இது குறித்து தெரிவித்ததாவது," இந்த இரண்டு திரைப்படத்தில் ஏதாவது ஒருத்திரைப்படமே தீபாவளி அன்று வெளியாகும்.

அது எதுவென பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்த தீபாவளி நம்ம தீபாவளி தான்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இதனைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There something both films but this our Diwali Pradeep Ranganathan


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->