உயிருக்கு ஆபத்தான சூழலில் நடிகர் மாதவன்! லடாக்கில் சிக்கி தவிப்பு.. இன்ஸ்டாவில் போட்ட ஸ்டோரி.. பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


லடாக்கில் கடும் மழையால் அங்குள்ள வாழ்வாதாரமும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் மாதவன் லே பகுதியில் சிக்கித் தவித்து வருகிறார். கடந்த 2008ஆம் ஆண்டு பனிப்பொழிவால் லடாக்கில் சிக்கிய அனுபவத்தை சந்தித்திருந்த மாதவனுக்கு, 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகின்றது. திடீர் மேகவெடிப்பால் அணைகள் நிரம்பி, ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. பல குடியிருப்புகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், மழை தணியாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் தான் லேவில் தங்கியிருக்கும் நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில்,“மீண்டும் லேவில் சிக்கி விட்டேன். விமானங்கள் இல்லை. 17 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியான அனுபவம் நடக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், பனி மூடிய மலைகள், கனமழைக்கான மேகமூட்டம் போன்ற காட்சிகளை தனது ஹோட்டல் அறையிலிருந்து படம் பிடித்து ஸ்டோரி மூலமாக பகிர்ந்துள்ளார். கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியான மழை காரணமாக லே விமான நிலையம் மூடப்பட்டதால், வீடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு ‘3 இடியட்ஸ்’ திரைப்பட படப்பிடிப்புக்காக லடாக்கின் பாங்காங் ஏரிக்கு சென்றிருந்த மாதவன், அப்போது கடும் பனிப்பொழிவால் சிக்கியிருந்தார். தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே போன்ற அனுபவத்தை சந்திக்க நேர்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், மாதவன் எந்த படப்பிடிப்புக்காக லடாக்கில் சென்றுள்ளார்? எப்போது திரும்புகிறார்? என்பதற்கான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Madhavan in life threatening situation Trapped in Ladakh What is the background to the story he posted on Instagram


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->