IPS Vijaykumar on Duty; வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி ரீ-ரிலீஸாகும் விஜய்யின் 'தெறி' திரைப்படம்..!
Vijays Theri movie to be re released on February 27th
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அத்துடன், வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்தியில் வருண் தவான் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'பேபி ஜான்' என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், 'தெறி' படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். ஆனால், எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான 'ஜன நாயகன்' திரைப்படம் சென்சார் பிரச்சனையால் வெளியாகவில்லை. இதனால், தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
ஆனால், புதிய படங்களின் வெளியீடால் தெறி படத்தின் ரீரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் 'தெறி' படம் வரும் 27-ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
English Summary
Vijays Theri movie to be re released on February 27th