'சினிமாவில் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ்களை வைத்தே சம்பளம் முடிவு'; என்ன செய்து இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ்களை அதிகரிப்பேன்..? பிரபல நடிகர் புலம்பல்..! - Seithipunal
Seithipunal


இன்றைய சினிமா உலகில் அதிகளவில் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சினிமாவிற்கான தங்களது வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து, சினிமாவில் ஒரு வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால்,  ஃபாலோயர்கள் அடிப்படையில் பெரும்பாலான நபர்களுக்கு சினிமாவில் வாய்ப்புக்கள் கிடைக்கின்றது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் உள்ள  ஃபாலோயர்கள் பொறுத்தே சம்பளம் முடிவு செய்யப்படுவதாக பிரபல குணச்சித்திர நடிகர் ஷிவா ஷா ரா கவலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:


''04 மணி ஆகிறது. தூக்கம் வராமல் சுற்றிக் கொண்டிருக்கிறேன். படத்தில் வாய்ப்பு கொடுப்பவர்கள் எல்லோரும், இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு எவ்வளவு ஃபாலோயர்ஸ் இருக்கிறது என்பதை கேட்டு தான் சம்பளத்தை முடிவு செய்கிறார்கள்.

இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ்களை அதிகரிப்பதற்கு எனக்கு தகுதி இல்லையே. நீண்ட குந்தல் கிடையாது. மொழு மொழு கன்னங்கள் கிடையாது. முகம் முழுவதும் தாடி. அதுவும் நரைத்து போய்விட்டது. ஆக என்னால் ரீல்ஸ் கூட பண்ண முடியாது. என்ன செய்து இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ்களை அதிகரிப்பேன்.'' என்று புலம்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous actor Shiva Shahra laments that salary is decided based on Instagram followers in cinema


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->