“3 மணிநேரம் பாத்ரூமில் பதுங்கி இருந்த கத்துக்குட்டி” கவனத்திற்கு... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மின்சாரத் தேவையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 விலைக்குக் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

ஒரு யூனிட்டுக்கு ரூ.35-க்கு மேல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும், நிர்வாகத் தோல்வி அல்லது முறைகேடு என்று திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து இருந்தார்.

இந்நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நாம் தற்பொழுது விடுக்கப்பட்டுள்ள  டெண்டர் வரும் அக்டோபர் 31 வரை மட்டுமே, அதுவும் peak hours தேவையான மாலை 6 மணி முதல் 12 மணி வரை. (6 மணி நேரம் மட்டுமே)

மின்சார வாரியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்ய கடுமையாக போராடி வருகிறோம். கண்டிப்பாக சீரமைப்போம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் துறைவாரியாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு சீரமைப்பும் நடைமுறை படுத்தப்பட்ட பிறகு அது குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

Long term ஒப்பந்தம் குறித்து பொய் சொல்வதாக கூறிய “கரூர் கம்பெனி” மற்றும் “3 மணிநேரம் பாத்ரூமில் பதுங்கி இருந்த கத்துக்குட்டி” கவனத்திற்கு:

கடந்த 15 வருடத்தில் போடப்பட்ட long term ஒப்பந்தம் அனைத்தும் அதிமுக அம்மா காலத்தில் 2013-யில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், திமுக ஆட்சி காலத்தில் எந்த long term ஒப்பந்தமும் போடப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister nirmal kumar reply to dmk udhay and senthil balaji


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->