தமிழ்நாட்டின் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிகிறது; தங்கம் தென்னரசு..!
Thangam Thennarasu says that the continuous rise in retail inflation in Tamil Nadu is a cause for concern
''சில்லறை பணவீக்க உயர்வு, ஜி.எஸ்.டி வரி வசூல் குறைவு எனத் தமிழ்நாடு வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது, இனியும் வினோத கணக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்காமல் அரசு உரிய நடவடிக்கை எடுத்துப் பணவீக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.'' என தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. ஆகஸ்ட் மாதம் 5.92% ஆக இருந்த தமிழ்நாட்டின் சில்லறை பணவீக்கம், செப்டம்பர் மாதம் 6.81% ஆக உயர்ந்திருப்பது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் குறியீடாக இருப்பதை மறுக்கமுடியாது.
தேசிய சராசரியே 5.54% என இருக்கும்போது, தமிழ்நாடு அதைவிடக் கூடுதலாகச் சில்லறை பணவீக்கத்தைக் கொண்டிருப்பது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் இந்த அரசின் மெத்தனப்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, கிராமப்புறப் பணவீக்கம் 7.17% ஆக இருப்பது, விலை உயர்வு கிராமப்புற எளிய மக்களையே அதிகம் பாதிக்கிறது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
சில்லறை பணவீக்க உயர்வு, ஜி.எஸ்.டி வரி வசூல் குறைவு எனத் தமிழ்நாடு வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது, இனியும் வினோத கணக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்காமல் அரசு உரிய நடவடிக்கை எடுத்துப் பணவீக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.'' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Thangam Thennarasu says that the continuous rise in retail inflation in Tamil Nadu is a cause for concern