நடுவானில் பறந்த விமானம்; பணிப்பெண்களை தாக்கியதோடு, கடித்த பிரபல நடிகை..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க்கிற்கு சென்ற பயணிகள் விமானத்தில் 'லீகலி பிளாண்ட்', 'ஹெல்பாய்' மற்றும் 'க்ரூயல் இன்டென்ஷன்ஸ்' உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த நடிகை செல்மா பிளேர் பயணித்துள்ளார்.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறக்க செல்மா பிளேர் முயன்றதாகவும், அதைத் தடுக்க வந்த பணிப்பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது செல்மா பிளேர், ஒரு விமானப் பணிப்பெண்ணைக் கையால் தாக்கியதாகவும், மற்றொரு பணியாளரைக் கடித்ததாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதில் இரு பணியாளர்களும் காயமடைந்த நிலையில், உடனடியாக மருத்துவ உதவிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த விமானம் நியூயார்க்கில் தரையிறங்கிய நிலையில், புகாரின்பேரில் செல்மா பிளேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்மா பிளேர் நரம்பியல் சார்ந்த மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டுள்ளார். தீவிர நரம்பியல் மருந்துகளைத் தவற விட்டதால் ஏற்பட்ட கடுமையான குழப்பம் மற்றும் திடீர் மருத்துவ அவசரநிலை காரணமாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக  2016-ஆம் ஆண்டிலும் செல்மா பிளேர், மெக்சிகோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த விமானத்தில் மருந்து மற்றும் மதுபானக் கலவையால் ஏற்பட்ட மன உளைச்சலில் விமானத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A famous actress assaulted and bit flight attendants on a plane mid air


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->