''ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை எங்களது போராட்டம் ஓயாது''; ராகுல் காந்தி திட்டவட்டம்..!
Rahul Gandhi has categorically stated that their protest will not cease until Gyanesh Kumar resigns
''தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்திய எங்களது போராட்டம் ஓயாது''என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான இந்த போராட்டத்தின் அடுத்தகட்டம் தொடர்பாக ஆலோசனை நடந்த ராகுல் காந்தியின் டெல்லி வீட்டில் கூட்டணி தலைவர்கள் இன்று மாலை கூடினர்.
இதில், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு ராகுல் காந்தி தேநீர் விருந்து அளித்தார். அப்போது ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்பிறகு ராகுல் காந்தி பேசும் போது கூறியதாவது;
மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது என்றும், இதை தடுத்து ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றிணைந்து போராடுகிறோம் என்றும், இது பலமுனை போராட்டம் கிடையாது, ஒற்றை போராட்டம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ஒருமித்த கருத்துடன் போராடுகிறோம் என்றும், எங்களது போராட்டம் ஓயாது என்றும், இரண்டு ஆண்டுகள் ஆனாலும் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராடுவோம். பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை அமைச்சர் அமித் ஷாவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் அமல்படுத்தி வருகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க முயற்சிக்கும் யாரும் தப்பிக்க முடியாது. பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் உள்ளிட்டோர் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்றும், உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி, இந்திய நீதித் துறை மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Rahul Gandhi has categorically stated that their protest will not cease until Gyanesh Kumar resigns