யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கான கட்டண வசூல் நடைமுறை தீபாவளிக்கு பின் அமல்..! - Seithipunal
Seithipunal


யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கான கட்டண வசூல் தீபாவளிக்குப் பிறகு அமல் செய்யப்படும் என்று தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''யுபிஐ உயர்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு யுபிஐ வணிக கட்டண நடைமுறையை தள்ளிவைக்க கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 

தீபாவளி பண்டிகைக்கு பிறகு வணிக யுபிஐ கட்டண வசூல் நடைமுறை அமலுக்கு வரும். இது தொடர்பான தேதி பின்னர் வெளியிடப்படும்.''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தசரா', 'நவராத்திரி', 'தீபாவளி' உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் கட்டண வசூல் நடைமுறையை தள்ளி வைக்க வர்த்தக, தொழில் சேம்பர் கோரிக்கை விடுத்ததோடு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வணிகர் சங்கங்களும் கோரிக்கை விடுத்தன. இதையேற்று கட்டண வசூல் நடைமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பண்டிகை கால விற்பனை அதிகரிக்கும் என மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னதாக, செப்டம்பர் 14-ஆம் தேதி தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ரூ.2,000 வரையிலான வணிக யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் ரூ.3,000 வரை ரூ.12, ரூ.50,000 வரை ரூ.200, ரூ.75,000-க்கு மேல் ரூ.300 கட்டணத்தை வணிகர்கள் செலுத்த வேண்டும்.

இதில் சிறு வணிகர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்படும். மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரை யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் வணிகர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.''என்று என்பிசிஐ விளக்கம் அளித்தது.

நாடு முழுவதும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கான கட்டண வசூல் நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தச் சூழலில், யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கான கட்டண வசூல் நடைமுறை தீபாவளிக்கு பின் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fee collection for UPI merchant transactions to be implemented after Diwali


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->