'தேர்தல் ஆணையம் சாதாரண மக்களை பயங்கரவாதிகள் போல நடத்துகிறது'; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க.வை திருப்திப்படுத்த தேர்தல் ஆணையத்தால் மேற்குவங்கம் குறிவைக்கப்படுவதாகவும், ஒரு குறிப்பிட்ட கட்சியால் நடத்தப்படும் 'துக்ளக் ஆணையமாக' தேர்தல் ஆணையம் மாறிவிட்டது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். 

வங்காள அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் பாதிக்கப்பட்டால், நாங்கள் அவர்களை 100 சதவீதம் பாதுகாப்போம் எனவும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். 

அதுதான், ERO-க்களை இடைநீக்கம் செய்வதற்கான காரணம் என்ன? என்றும், இடைநீக்கம் செய்யப்பட்ட ERO-க்களிடம், அவர்களின் குற்றம் என்ன..?  அவர்களின் தவறு என்ன என்று கேட்டீர்களா? என ஏழு உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், தர்க்கரீதியான முரண்பாடுகளைக் காரணம் காட்டி, ஜனநாயக உரிமைகளைப் பறித்து, தேர்தல் ஆணையம் சாதாரண மக்களை பயங்கரவாதிகள் போல நடத்துகிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார் .

அத்துடன், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை அழித்து, மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டில் தலையிடுகிறார்கள் என்றும், எந்த நாற்காலியும் நிரந்தரம் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக ஐடி பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நீக்கியதாகவும் மம்தா பானர்ஜி பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mamata Banerjee accuses Election Commission of treating ordinary people like terrorists


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->