'தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அதன் தலைவர் விஜய்க்கும் வாழ்த்துக்கள்'; வானதி சீனிவாசன்..!
Vanathi Srinivasan extends her wishes to Vijay
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், இன்று காலை 08 மணிமுதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் முதன் முதலில் தேர்தலில் களமிறங்கிய விஜய்யின் தவெக கட்சி தனி பெருபான்மையாக முன்னிலை பெற்று வருகிறது. விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றிபெற்றுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பல அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழக பாஜகவின் வானதி சீனிவாசன் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பது இத்தேர்தல் முடிவுகள் தெரிய வந்துள்ளது.
கடும் போராட்டத்திற்கு நடுவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள அதிமுக, பாமக, பாஜக, அமமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிகளில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும், எனக்காக தேர்தல் பணியாற்றிய தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Vanathi Srinivasan extends her wishes to Vijay