சென்னை திருமங்கலத்தில் போக்குவரத்து தடுப்புகளை காலால் உடைத்த இளம்பெண்கள் 3 பேர் கைது..!
Three young women arrested for kicking down traffic barricades in Chennais Thirumangalam
சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் போக்குவரத்து தடுப்புகளை காலால் உதைத்து கீழே தள்ளி உடைத்த மூன்று இளம் பெண்களை போலீசார் கைது செய்துள்ள அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் ஸ்கூட்டில் ஹெல்மட் அணியாமல் 03 இளம்பெண்கள் சென்றுள்ளனர். அவர்கள், சாலையில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து தடுப்புகளை காலால் உதைத்து கீழே தள்ளி உடைத்துள்ளனர். இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக வைத்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து போக்குவரத்து தடுப்புகளை காலால் உதைத்து கீழே தள்ளி உடைத்த 03 இளம்பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன்பின்னர், 03 பேரும் போலீசாரால் எச்சரிக்கப்பட்டு காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Three young women arrested for kicking down traffic barricades in Chennais Thirumangalam