மன்னராட்சி கோட்டைகளை தகர்த்தெறிந்த விஜய்...! 'வரலாற்று மிக்க சாதனை' - டாக்டர் கிருஷ்ணசாமி புகழாரம்...!
Vijay who demolished strongholds monarchy Historic achievement Dr Krishnasamy praises
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய கணக்கெடுப்பு படி தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை மற்றும் வெற்றியைப் பதிவு செய்து அரசியல் களத்தில் தலைசிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில் தேர்தலில் இரு திராவிட கட்சிகளையும் அடியோடு வீழ்த்தி யாரும் கண்டீராத வரலாற்று மிக்க சாதனை படைத்துள்ள விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது," அண்மைக்காலமாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சற்றே ஏறக்குறைய 110 தொகுதிகளில் சிறப்புமிக்க வெற்றிக்கனியை கைப்பற்றி, சட்டமன்றத்தின் யாரும் அசைக்க முடியாத தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அதன் தலைவர் தளபதி விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நெகிழ்ச்சி மிக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இரு திராவிடக் கட்சிகளுக்கு நடுவே மட்டுமே நிகழ்ந்து வந்த அரசியல் மாற்றத்தை மாற்றி, அந்த இரண்டு கட்சிகளையும் அறவே வீழ்த்தி விஜய் அவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதன் மிதமிஞ்சிய ஊழல், மது போதை, சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், நாள்தோறும் கொலை மற்றும் கொள்ளை எனச் செயல்பாடற்ற அரசு நிர்வாகத்தின் மீது கோபத்தின் உச்சத்தில் உள்ள இளைஞர்களும் தமிழக மக்களும் ஒரு அசைக்கமுடியாத அரசியல் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி நல்லாட்சி அமைக்க கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை தவெக தலைவர் விஜய் அவர்கள் துரிதமாக பயன்படுத்திக் கொள்வார் என நம்பிக்கை கொண்டுள்ளேன்...! " எனப் பதிவிட்டுள்ளார்.இதற்கு இணையத்தில் பலரும் தங்களது பெரும் அதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Vijay who demolished strongholds monarchy Historic achievement Dr Krishnasamy praises