இந்தோனேசியா காட்டுத்தீயின் எதிரொலி; சிங்கப்பூரில் மூச்சுத்திணறல்; மக்கள் வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல்..!
Singapore faces breathing difficulties due to the impact of Indonesian forest fires
இந்தோனேசியாவில் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூருக்கு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள சிங்கப்பூரில் காற்று மாசு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தீயால் நிலவும் புகை மண்டலம் மெல்ல மெல்ல நகர்ந்து, சிங்கப்பூரில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, காற்றின் தரக் குறியீடு 181 ஆக பதிவாகியுள்ளது. இது சுவாசப் பிரச்சனை மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆரஞ்சு எச்சரிக்கையை குறிப்பதாகும்.
தற்போது, சிங்கப்பூரில் வானுயர கட்டடங்கள் தெரியாத அளவுக்கு புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் முகக் கவசத்தை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும் சிங்கப்பூர் அரசு பரிந்துரைத்துள்ளது.
English Summary
Singapore faces breathing difficulties due to the impact of Indonesian forest fires