திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டி?!
Vijay Double Lead Sparks By-Election Rumors Will Trisha Contest in Trichy East
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அசுர வளர்ச்சி அரசியல் வட்டாரத்தையே மிரள வைத்துள்ளது.
பிற்பகல் 1:20 மணி நிலவரப்படி, தவெக 106 தொகுதிகளிலும், அதிமுக 57 இடங்களிலும், திமுக 49 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
குறிப்பாக, தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தனது வெற்றியைத் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் ஆறாவது சுற்று முடிவில் 40,339 வாக்குகள் பெற்று, எதிர்த்துப் போட்டியிட்ட சேகரை விட 16,574 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் முன்னிலையில் உள்ளார்.
அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் 29,884 வாக்குகள் பெற்று, 12,173 வாக்குகள் வித்தியாசத்தில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறார்.
சட்டப்படி இரண்டு தொகுதிகளில் வெற்றிபெறும் பட்சத்தில், ஒரு தொகுதியின் உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்நிலையில், விஜய் தனது பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்குக் காலியாகும் இடத்திற்கு நடைபெறும் இடைத்தேர்தலில், தவெக சார்பாக நடிகை த்ரிஷா களம் இறக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ
ற்கனவே திரிஷா இன்று காலை விஜய்யைச் சந்தித்துப் பேசியது, இந்த யூகங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
English Summary
Vijay Double Lead Sparks By-Election Rumors Will Trisha Contest in Trichy East