'மக்கள் ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்கிறோம்'; உதயநிதி ஸ்டாலின் பேட்டி..! - Seithipunal
Seithipunal


'மக்கள் ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;

சேப்பாக்கம் தொகுதியில் என்னை 02-வது முறையாக தேர்வு செய்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், நாளை சட்டமன்ற உறுப்பினர்களுடன் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்த உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் வழியில் செயல்படுவோம் என்றும், வெற்றிக்காக உழைத்த திமுகவினருக்கு நன்றி. மக்கள் ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளதோடு, வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கும், புதிதாக பொறுப்பேற்க இருக்கும் அரசுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We accept the verdict delivered by the people says Udhayanidhi Stalin in an interview


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->