த.வெ.க.வுடன் கைகோர்க்கிறதா காங்கிரஸ் ..? தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பரபரப்பு பேட்டி..! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதற்காக தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டத்தில் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, 10 நாட்கள் கழித்து இன்று வாக்கு எண்ணிக்கை  காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், த.வெ.க. 107 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக  உருவெடுத்துள்ளது.

இந்த தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி 05 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 தொகுதிகள் தேவையான நிலையில், த.வெ.க. பெரும்பான்மை பெற சில தொகுதிகள் தேவையாக உள்ளன. இதனால், பெரும்பான்மை பெற சில கட்சிகளின் ஆதரவை கோர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பு த.வெ.க.வுடன் காங்கிரஸ் கைகோர்க்கும் என கூறப்பட்டது. அது  நடக்கவில்லை. ஆனால், த.வெ.க.வுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை தற்போது காங்கிரஸ் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது; ''காங்கிரஸ் தலைமையிடம் அறிக்கை ஒன்றை அளித்து இருக்கிறேன். அவர்கள் தமிழக விவகாரம் பற்றி முடிவெடுப்பார்கள்'' என கூறியுள்ளார்.

 அத்துடன், தமிழக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்து இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடும்படியாக இளைஞர்களும், பெண்களும் த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். அதனால், பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர்.

 இதுதொடர்பாக, ஏற்கனவே நான் காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் அமைப்பு பொது செயலாளர் வேணுகோபால் ஆகியோருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி விட்டேன். அவர்கள்
அனைவரும் தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Congress In charge gives sensational interview regarding Congress joining hands with TVK


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->