தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் தவெக; விஜய்யின் வெற்றியை கொண்டாடும் விதமாக சிபி சத்யராஜ் போட்ட பதிவு..! - Seithipunal
Seithipunal


நடிகர் சத்தியராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா இருவரும் தீவிர திமுக ஆதரவாளர்களாக தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். ஆனால், நடிகரும் சத்யராஜின் மகனுமான சிபி சத்யராஜ் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றதோடு, தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக பல பதிவுகளை எழுதி வந்தார். 

தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்த வந்த சிபிராஜ் தேர்தல் நாளுக்கு முன்பாக விஜய் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக ''வென்று வா தலைவா! நாங்க இருக்கோம்'' என்று கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 111 தொகுதிகளை கைப்பற்றி அனைத்து பெரும்பான்மை கட்சிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதன்படி, காலை முதல் விஜய்யின் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில் நடிகர் சிபி ராஜ், தன்னுடைய மகிழ்ச்சியை எக்ஸ் தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, ''நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லாரும் நல்லா இருப்போம்..!'' என பதிவிட்டுள்ளார்.

மேலும், 'தற்போது அதிக மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் ரசிகர் சிபி சத்யராஜ்’என ஒருவர் பதிவிட்டதற்கு, அதற்கு 100 சதவீதம் என சிபி பதிலளித்துள்ளார். விஜய்யின் வெற்றிக்கு இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர் ஜீவா உள்ளிட்டோரும் வாழ்த்துக்கள் கூறி, பதிவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sibiraj posts a message celebrating Vijays success


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->