'என் கைதை 'காமெடி' அரசியல் நாடகமாகப் பார்க்கிறேன்'...!முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து கைதான பின் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி...! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தஞ்சாவூர் மாவட்ட காவலர்கள் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம்–1-க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.கைது செய்யப்பட்டு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த கைது நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறியதாவது,"என் மீதான இந்த கைது நடவடிக்கையை நான் ஒரு அரசியல் நாடகமாகவே பார்க்கிறேன். இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அரசு, அவற்றில் கவனம் செலுத்தாமல், கவனத்தை திசைதிருப்பும் நடவடிக்கைகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

நான் பேசாத கருத்துகளை பேசியதாக சித்தரித்து, என் மீது திட்டமிட்ட பொய்ப் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டு வருகிறது.காவிரி நீர், குறுவை சாகுபடி, விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை மாற்றுவதற்காகவே இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தியுள்ளனர்.

கைது மிரட்டல்களாலும், வழக்குகளாலும் தி.மு.க.வை அச்சுறுத்த முடியாது. தி.மு.க.வின் கடைசி தொண்டன்கூட இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டான்.நீதித்துறையின் மீது முழு மரியாதை வைத்துள்ளேன். நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதிப்பேன். இந்த விவகாரத்தில் சட்டரீதியாகவே எதிர்கொண்டு உண்மையை நிரூபிப்போம்' என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I see my arrest comedy political drama Udhayanidhi Stalin dramatic interview after being arrested criticizing Chief Minister Vijay


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->