மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் புதிய திட்ட அறிக்கை குறித்து கமல்ஹாசன் கேள்விக்கு மத்திய அரசு பதில்..! - Seithipunal
Seithipunal


மேகதாது அணை குறித்து மநீம தலை​வர் கமலஹாசன் நாடாளு​மன்​றத்​தில் எழுப்​பிய கேள்விக்கு மத்​திய அரசு பதில் அளித்​துள்​ளது.

மக்​கள் நீதி மய்​யம் தலை​வரும், எம்​.பி.​யு​மான கமல்​ஹாசன், ''மேகே​தாது திட்​டத்​துக்​காக திருத்​தப்​பட்ட திட்ட அறிக்​கையை கர்​நாடக அரசு சமர்ப்​பித்​துள்​ள​தா..? இத்​திட்​டத்​தால் தமிழகத்​தின் பாசன வசதி மற்​றும் குடிநீர் தேவை​களுக்கு பாதிப்பு ஏற்​படுமா என ஆய்வு செய்​யப்​பட்​டுள்​ள​தா..?'' என மக்களவையில் கேள்வி​களை எழுப்​பி​யிருந்​தார்.

இந்த ​கேள்வி​களுக்கு மத்​திய நேர்|(ஜல்) சக்​தித் துறை இணை​யமைச்​சர் ராஜ் பூஷன் சௌத்ரி பதில் அளித்து கூறியுள்ளதாவது. கர்​நாடக அரசு 2019-ஆம் ஆண்டு சமர்ப்​பித்த மேக​தாட்டு அணை மற்​றும் குடிநீர்த் திட்​டத்​தின் விரி​வான திட்ட அறிக்கை ஏற்​க​னவே திருப்பி அனுப்​பப்​பட்​டு​விட்​டது.

காவிரி நடு​வர் மன்​றத் தீர்ப்பு மற்​றும் மத்​திய நீர் ஆணை​யத்​தின் வழி​காட்​டு​தல்​களுக்கு உட்​பட்டு திருத்​தப்​பட்ட புதிய திட்ட அறிக்​கை​யைச் சமர்ப்​பிக்​கு​மாறு கர்​நாடக அரசிடம் கேட்​கப்​பட்​டுள்​ளது.

இது​வரை அத்​தகைய திருத்​தப்​பட்ட புதிய திட்ட அறிக்கை எது​வும் மத்​திய நீர் ஆணை​யத்​திற்கு வந்து சேர​வில்​லை. காவிரிப் படு​கை​யில் அமை​யும் நீர் திட்​டங்​களுக்​கான திட்ட அறிக்​கைகளை மத்​திய நீர் ஆணை​யம் பரிசீலிக்​கும் போது, மத்​திய நீர் ஆணை​யத்​தின் நடை​முறை வழி​காட்​டு​தல்​கள், காவிரி நடு​வர் மன்​றத்​தின் இறு​தித் தீர்ப்பு மற்​றும் 2018 பிப்​ர​வரி 16 அன்று உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் மட்​டுமே ஆய்வு மற்​றும் மதிப்​பீடு செய்​யப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.இதே​போல், மின்துறை தொடர்பாக மற்​றொரு கேள்​வி​யும் எழுப்​பி​யிருந்​தார்.

இக்​கேள்வி​களுக்கு மத்​திய மின்​சா​ரம் மற்​றும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துறை இணை​யமைச்​சர் ஸ்ரீபத் நாயக் அளித்த பதில்: கடந்த 5 ஆண்​டு​களில் தமிழகத்​தின் உச்​சகட்ட மின் தேவை​கள் அனைத்​தும் 100 சதவீதம் பூர்த்தி செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் மின் பற்​றாக்​குறை 0 சதவீத​மாக உள்​ளது. தமிழகத்​தில் துணை மின்​நிலை​யங்​களைப் புதுப்​பிக்​க​வும், பேட்​டரி சேமிப்பு அமைப்​பு​களை அமைக்​க​வும் ரூ.785.21 கோடி மானி​யத்​தில் 10 திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

ஸ்மார்ட் மீட்​டர் பொருத்த ரூ.9,235 கோடி​யும், மின் விநி​யோகக் கட்​டமைப்​பைச் சீரமைக்க ரூ.9,568 கோடி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. மாநிலங்​களுக்கு இடையே​யான மின் இணைப்பு திட்​டத்​தின் கீழ் 8.38 கிகா​வாட் புதுப்​பிக்​கத்​தக்க ஆற்​றலை இணைக்க திட்​ட​மிடப்​பட்​டு, அதில் 2.38 கிகா​வாட் திட்​டங்​கள் தமிழகத்​தில் ஏற்​கெனவே செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளன என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central government responds to Kamal Haasan question regarding Karnatakas new project report on the Mekedatu Dam issue


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->