தமிழக அரசியலில் அடுத்த அதிரடி திருப்பிம்...! உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுகிறாரா...? நீலாங்கரையில் தீவிர போலீஸ் குவிப்பு...! - Seithipunal
Seithipunal


சென்னை நீலாங்கரையில் உள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தைச் சுற்றி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையில், முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கிலும், சமூக வலைதளங்களிலும் கடும் சர்ச்சையை கிளப்பின.

இதையடுத்து, பல்வேறு தரப்பினரிடமிருந்து அவருக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், த.வெ.க. சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த பரபரப்பான சூழலைத் தொடர்ந்து, த.வெ.க. தொண்டர்கள் இல்லத்தை முற்றுகையிடும் முயற்சி மேற்கொள்ளலாம் அல்லது விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை தகவல்களின் அடிப்படையில், சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் ஏராளமான காவலர்கள் உதயநிதி ஸ்டாலினின் இல்லம் முன்பும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இல்லத்தைச் சுற்றி பல அடுக்குகளில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இரும்புத் தடுப்புகள் பொருத்தப்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிக்குள் நுழையும் நபர்களின் விவரங்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதால், நீலாங்கரை முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

இதற்கிடையில், காவல் இணை ஆணையர் விஜயகுமார் உதயநிதி ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் சென்று ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது, சட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்ட நடைமுறைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும், அவரது வழக்கறிஞர் வரும்வரை அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பொறுமையுடன் காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவியதால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உதயநிதி ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் வந்ததாகவும், அதன் பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து நிலவி வரும் இந்த பதற்றமான சூழல் காரணமாக, நீலாங்கரை பகுதி முழுவதும் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

next dramatic turn Tamil Nadu politics Is Udhayanidhi Stalin being arrested Heavy police deployment Neelankarai


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->