சென்னையில் பரபரப்பு; முதல்வர் விஜய் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கைது; சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவே இந்த கைது என பேட்டி..! - Seithipunal
Seithipunal


முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய மற்றும் அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து  திமுக சார்பில் நேரு தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் உதயநிதி கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அத்துடன், முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் தவெக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அவரை கைது செய்ய, நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பு இன்று காலையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினரிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி கூறியதாவது;

நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றி வரும் தவெக அரசையும், முதல்வர் விஜய்யையும் கண்டித்து 22 நிமிடங்கள் பேசினேன். அரசு எப்படியெல்லாம் விவசாயிகளை ஏமாற்றுகிறது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மேகேதாட்டுவை எதிர்த்து குரல் கொடுக்க திராணியற்ற, தெம்பில்லாத, பயந்தாங்கொள்ளி அரசாக இருக்கிறது என்றுதான் ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.

அதையெல்லாம் மறைக்க இப்போது இந்த பிரச்சினையை உருவாக்கியுள்ளனர். பிரச்சினைகளை திசை திருப்பும் வகையில், ரீல்ஸ் வெறி முற்றிப்போய் முதல்வரும், அமைச்சர்களும் வாழ்வதாக நேற்று பேசினேன். ஆனால், நான் பேசாத ஒன்றை பேசியதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, பொய் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்துள்ளனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. இதனை சட்டப்படி நான் சந்திப்பேன்.''என்று தெரிவித்துள்ளார். அதன் பின்னர் காவல்துறையினர் வாரி தஞ்சை அழைத்துச் செல்கின்றனர்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தஞ்சாவூரில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வருக்கு எதிராக எதிராகவும், ஆபாசமாகவும் பேசியதாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி என்பவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் போலீஸார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர்.

மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்கவில்லை என தவெக அரசை குற்றஞ்சாட்டி தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் முதல்வரை அவதூறாக விமர்சித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டதாவது;

அதாவது, மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்கவில்லை என தவெக அரசை குற்றஞ்சாட்டி தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் முதல்வரை அவதூறாக விமர்சித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவே இந்த கைது வந்துள்ளதாக உதயநிதி தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றம் இவ்வாறாக உத்தரவு பிறப்பித்தது.

அதாவது,பகல் 12 மணிக்கு வழக்கை விசாரிக்க நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் அளித்த்ததோடு, அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என காவல்துறையை அறிவுறுத்த அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi Stalin arrested for making objectionable remarks about Chief Minister Vijay


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->