பிரைவேட் ஜெட், ஹை கிளாஸ் வீடு! அஜித் குமார் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், தனது எளிமையான வாழ்க்கை முறையாலும், திரைத்துறையில் தனித்த அடையாளத்தாலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். ரசிகர் மன்றங்களை கலைத்து, சினிமா மற்றும் தனது தனிப்பட்ட ஆர்வங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அஜித், தற்போது கார் ரேஸிங்கிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அஜித், தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்தார். கடந்த ஆண்டு வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்திற்குப் பிறகு, தனது ரேஸிங் ஆர்வத்தில் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.

திரையுலகில் ஒரு படத்திற்கு சுமார் ரூ.105 கோடி முதல் ரூ.160 கோடி வரை சம்பளம் பெறும் அஜித் குமாரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.350 கோடி முதல் ரூ.410 கோடி வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீடு வெளிப்புறத்தில் எளிமையாகத் தோன்றினாலும், உள்ளே கலைநயமிக்க அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், விசாலமான வரவேற்பு அறை போன்ற வசதிகளுடன் கூடிய இந்த வீட்டின் மதிப்பு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதைத் தவிர ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் மேலும் ஒரு நவீன வசதிகள் கொண்ட வீடும் அவருக்கு சொந்தமாக உள்ளது.

வாகனங்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித்திடம் பல உயர்தர சொகுசு கார்கள் உள்ளன. பெர்ராரி SF90, போர்ஷே 911 GT3, பிஎம்டபிள்யூ 740Li, மெர்சிடீஸ் பென்ஸ் GLS 350 மற்றும் லம்போர்கினி போன்ற கார்கள் அவரது வசம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் பைக் ரேஸிங்கில் ஆர்வம் கொண்ட அவர், பிஎம்டபிள்யூ K1300S, பிஎம்டபிள்யூ S1000RR, ஆப்ரில்லியா கேப்பனோர்டு மற்றும் கவாஸாகி நின்ஜா போன்ற உயர்தர பைக்குகளையும் வைத்துள்ளார்.

இதற்கும் மேலாக, ரூ.25 கோடி மதிப்பிலான தனியார் ஜெட் விமானமும் அஜித்தின் சொத்து பட்டியலில் இடம்பெறுகிறது.

எளிமையாக வாழ்ந்தாலும், சொத்துகள் மற்றும் வாழ்க்கை முறையில் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் நடிகராக அஜித் குமார் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know how many crores Ajith Kumar assets are worth


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->